வெள்ளி, 25 டிசம்பர், 2015

ரதம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்





சிவகங்கை பொறியியல் மாணவரின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 'ரதம்'- 11 யூனிட் மின் சக்தியில் 400 கி.மீ. செல்லலாம்
11 யூனிட் மின்சக்தியில் 400 கி.மீ. தூரம் ஓடும் வகையிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ‘ரதம்’ என்ற அதிநவீன வசதிகள் உடைய இருசக்கர வாகனத்தை பொறியியல் மாணவர் ஒருவர் உருவாக்கி உள்ளார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மறவர் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் அமுதா. இவர்களின் இளைய மகன் மணிகண்டன் (21). இவர், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு பொறியியல் கல்வி (மெக்கானிக்கல்)படிக்கிறார்.
இவர், பிளஸ் 2 படித்தபோதே வாகன விபத்தை கட்டுப்படுத்தும் கருவி, பைக் திருட்டை தடுக்கும் கருவியை கண்டுபிடித்து ஆட்சியர், எஸ்பியிடம் பாராட்டு பெற்றுள்ளார்.
பொறியியல் படிப்பில் சேர்ந்த பின்னர், பெண்கள் தற்காத்துக் கொள்ளும் புதிய கருவியைக் கண்டுபிடித்தார்.
இந்நிலையில், எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ‘ரதம்’ என்ற அதிநவீன இருசக்கர வாகனத்தை உருவாக்கியுள்ளார். இதன் அறிமுக நிகழ்ச்சி நேற்று மானாமதுரையில் நடந்தது.
இதில் மாணவர் வி.ஆர். மணிகண்டன் பேசியது: ''வாகன எரிபொருளுக்கு அதிகம் செலவாகிறது. இதனால் மின்சாரத்தில் இயங்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ‘ரதம்’ தயாரித்துள்ளேன். இதில் மூன்றரை மணி நேரம் சார்ஜ் செய்தால், 11 யூனிட் மின்சாரம் பேட்டரியில் சேகரமாகும். இதன்மூலம், மணிக்கு 75 கிமீ வேகத்தில் சுமார் 400 கி.மீ. வரை பயணிக்கலாம். இதற்கான செலவு ரூ. 36 மட்டும்தான். பராமரிப்பு, தேய்மானம் இல்லை. இரைச்சல் இருக்காது. 300 கிலோ சுமையைத் தாங்கும்.
இந்த பைக்கில் விபத்தை அறிந்து தானாகவே தற்காத்துக் கொள்ளும் வசதி உள்ளது. மேலும் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை எடுக்க முடியாது. பெற்றோரின் பேச்சை மீறி அதிக வேகத்தில் வாகனம் ஓட்டும் பிள்ளைகளுக்கு கடிவாளம் போடும் வசதியும் உள்ளது. ஜிபிஆர்எஸ் தொழில்நுட்பமும் உள்ளது. வாகனத்தில் ஏற்படும் பழுதுகளை மடிக்கணினி மூலம் இணைத்து உரிமையாளர்களே தெரிந்துகொள்ளும் வசதியும் உள்ளது. வாகனம் திருடுபோகாமல் தடுக்கும் வசதியும் உள்ளது.
ரதம் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 1 கி.மீ.க்கு 9 பைசாதான் செலவாகும். இந்த வாகனத்தை ரூ. 80 ஆயிரம் செலவில் தயாரிக்கலாம். அரசு மானியம் கிடைத்தால் விலையில் 30 சதவீதம் குறையும். சூரிய சக்தி மூலம் பேட்டரியை சார்ஜ் ஏற்றும் வசதியும் உள்ளது. ‘ரதம்’ ஸ்கூட்டரின் காப்புரிமை, விற்பனைக்காக புனேயில் உள்ள ஏர்ஏஐ-அமைப்பின்அனுமதிக்காக காத்திருக்கிறோம்'' என்றார். இவரது தொலைபேசி எண் 96889 15084.


அதிவேகமாக கார் ஓட்டுபவரா நீங்கள்






நீங்கள் அடிக்கடி தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகமாக கார் ஓட்டுபவராக இருந்தால் ஒரு விசயத்தை நீங்கள் கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆங்கிலத்தில் அதை SPEED BLINDNESS என்று கூறுவார்கள். நீங்க உங்கள் வாகனத்தில் சாளரங்கள் அடைக்கப்பட்டு AC போடப்பட்டு 100 அல்லது 120 KM வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள், சில நேரத்திலேயே உங்கள் மூளை அந்த வேகத்திற்கு பழகிவிடும்.
மேலும் உங்களுக்கு பின்னால் மற்றும் முன்னாள் அதே வேகத்தில் நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லும் பட்சத்தில் அந்த வாகனங்களின் வேகமும் உங்களுடையதை ஒற்று இருப்பதால் உங்கள் அனைவரின் வேகமும் அளவில் அதிகமாக இருந்தாலும் குறைவானதாகவே உங்கள் மூளைக்கு புலப்படும்.நீங்கள் மெதுவாக செல்வாதாகவே உங்களுக்கு ஒரு தோற்றத்தை உங்கள் மூளை ஏற்படுத்தி விடும்.
திடீரென்று உங்கள் முன் செல்லும் வாகனம் பிரேக் அடிக்கும் போது கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாகனத்தை நீங்கள் எட்டி விடலாம் அல்லது நீங்கள் திடீரென்று பிரேக் அடிக்கும் பொழுது உங்கள் பின்னால் வரும் வாகனம் அதே கண்ணிமைக்கும் நேரத்தில் உங்கள் மீதுமோதிவிடலாம்.அப்படியான ஒரு இக்கட்டான சமயத்தில் மட்டும் தான் நீங்கள் செல்லும் வேகத்தை மூளை ஓர் அதிர்ச்சியுடன் கூடிய சூழலில் புரிந்துகொள்ளும் ஆனால் அது ஒரு காலம்கடந்த ஞானம் ஆகி நீங்கள் சுதாரிப்பதற்குள் விபத்தில் சிக்கிகொள்வீர்கள்.
மூளையின் இந்த குறைபாட்டை தான் ஆங்கிலத்தில் SPEED BLINDNESS or MOTION INDUCED BLINDNESS என்று சொல்வார்கள்.ஆகவே நீங்கள் வேகமாக செல்லும் போது அடிக்கடி SPEEDOMETERஐ கவனிக்க பழகி கொள்ளுங்கள். மேலும் நம் நாட்டில் 90 KMக்கு மேலும் வெளிநாடுகளில் 120 KMக்கு மேலும் வேகமாக செல்வது ஆபத்து தான்.








தேனி மாவட்ட சாதனை மாணவி...! கிருஷ்ணவேணி







தேனி மாவட்ட சாதனை மாணவி...!
கொசுக்களை விரட்ட நாம் என்ன செய்வோம்? Hit அல்லது Geygon Spray உபயோகிப்போம் இல்லாவிடில் Allout Liquid, Goodknight Liquid அப்படி எதாவது ஒரு இரசாயனப் பொருட்களை உபயோகிப்போம். எங்களிடம் உள்ள இயற்கைப் பொருட்களை வைச்சு எதாவது உபயோகப்படுத்தி இருக்கிறோமா? பதில் கூடுதலாக இல்லை என்றே வரும். இயற்கைப் பொருள்களை உபயோகித்தால் கெளரவக் குறைச்சல் எனற நினைப்பு அதிகமாகியுள்ளது கவலைக்குரியது. அதனால் இயற்கை பற்றி காலங்காலமாக நம் மூதாதையர் அறிந்து வைத்துள்ள அறிவை வரும் சந்ததிகள் இழக்கும் அபாயமும், செயற்கைப் பொருட்களால் ஏற்படும் பல தீங்குகள் பற்றிய விழிப்புணர்வும் அருகிச் செல்கின்றது.
கம்பம் ஆதிசுஞ்சனகிரி கல்லூரியில் M.Phil., படிக்கின்ற மாணவி கிருஷ்ணவேணி சில மாதங்களா கொசுக்களை விரட்ட வேப்பங்கோட்டை மூலம் மூலிகை மருந்து தயாரிக்கும் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். ஈரோட்டில் 2012ல் நடந்த இளைஞர் அறிவியல் விழாவில், கிருஷ்ணவேணி கண்டுபிடித்த கொசுவை விரட்டும் மூலிகை மருந்து ஆய்வு சமர்ப்பிக்கப்பட்டது. அதில் முதலாவது பரிசை வென்றார். இதைத் தமிழ்நாட்டில் எந்த மீடியாக்களும் சிறு செய்தியாகக்கூட வெளியிடவில்லை. நாமாவது இதை மக்களுக்கு எடுத்துச் செல்வோம் 

சர்க்கரை நோய்







ஆச்சரியம் ஆனால் உண்மை
சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்
சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்:
சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்
வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால் கிலோ
தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.
இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.
இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.
ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

சோனியா பிரதமராக முடியாதது ஏன்? சுப்பிரமணியசாமி சொல்லும் ரகசியம்

இராசேந்திர சோழ நாட்டின் பரப்பும், அமைப்பும்


இராசேந்திர சோழ நாட்டின் பரப்பும், அமைப்பும்
இராசேந்திர சோழன் சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரான இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவனுமாவான். விஜயாலய சோழன் காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசு இராஜேந்திரன் காலத்தில் அதன் பொற்காலத்தை அடைந்தது. சோழ மன்னர்களில் இராஜேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெருமை வாய்ந்தவன். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இராஜேந்திர சோழன் ஏற்கனவே பரந்து விரிந்திருந்த சோழப் பேரரசின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினான்.
இராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு; இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா(சிங்கப்பூர் - மலேசியா), சுமத்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இராஜேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற முதல் இந்திய மன்னன் ஆவான். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவன்; அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கை கொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கித் தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தான். அங்கே சிவபெருமானுக்காக இராஜேந்திரன் கட்டிய கற்கோயில் சோழர் காலக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.
இராஜராஜ சோழரின் இணை அரசனாக பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் இராஜேந்திரன் பட்டத்து அரசனாக முடிசூட்டப்பட்டான். தன்னுடைய ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே தன்னுடைய மகனான இராஜாதிராஜ சோழனை இளவரசனாகப் பட்டம் சூட்டி ஆட்சிப் பொறுப்புக்களை அவனுடன் பங்கிட்டுக்கொண்டான். இந்தப் பழக்கம் தனக்குப் பிறகு யார் முடிசூட்டப்பட வேண்டும் என்பதில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கவே நடைமுறைப்படுத்தப் பட்டிருக்க வேண்டும். இராஜாதிராஜ சோழன் கி.பி. 1018ல் இருந்தே தந்தையுடன் ஆட்சிப்பொறுப்பில் இருந்து வந்தான் ஏறக்குறைய 26 ஆண்டுகள் இருவரும் சோழப் பேரரசை நிர்வகித்து வந்தனர்.
தற்போதைய சென்னை, ஆந்திரம் பகுதிகளுடன், மைசூரின் ஒரு பகுதியையும் ஈழத்தையும் உள்ளிட்ட ஒரு பரந்த நாட்டை இராஜராஜன், இராஜேந்திரனுக்கு விட்டுச் சென்றான். அரசாங்க நிர்வாகம் மிகுந்த கவனத்துடன் நிறுவப்பட்டதுடன், பெரு நிலப்பிரபுக்கள், சிறு விவசாயிகள், தொழிற் குழுக்கள் ஆகியோரது உரிமைகளைப் பாதுகாக்கவும், அதே சமயம் மன்னனது அமைதியையும் சமூக உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் வலிமைமிக்க ஒரு அதிகாரவர்க்கமும் உருவாக்கப்பட்டது. நன்கு பயிற்சியளிக்கப்பட்ட வீரர்களைக் கொண்ட படை ஒன்று நாட்டின் விரிந்த எல்லையைக் காக்கும் திறன் பெற்றிருந்ததோடு புதிதாகக் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் எழும் எதிர்ப்புகளை அழிக்கவும், வெளிநாடுகளைக் கைப்பற்றவும் உதவிபுரிந்தது. ஈழம், மாலத்தீவுகள் போன்ற கடல் கடந்த நாடுகளைக் கைப்பற்றியபின் அவற்றைத் தம் அதிகாரத்திற்குள் நீடித்திருக்குமாறும் செய்ய இராஜேந்திரன் ஒரு சிறந்த கடற்படையையும் வைத்திருந்தான்.
இக்கடற்படையின் உதவியுடன் கிழக்கிந்தியத் தீவுகளுடனும், சீனத்துடனும் ஏற்பட்ட வாணிகத்தையும் பாதுகாக்க முடிந்தது. இவற்றைப் பயன்படுத்தி தான் ஆட்சி செய்த முப்பத்து மூன்று ஆண்டுகளில் இராஜேந்திரன் தன் நாட்டை இந்து அரசர்கள் ஆண்ட நாடுகளிலேயே தலைசிறந்த ஒன்றாகவும், மலேயாத் தீபகற்பத்தையும், கீழைக் கடற்கரைப் பகுதிகளையும் உள்ளிட்ட மிகப் பரந்த நாடாகவும் மாற்றி அமைத்தான். ஆட்சியின் முற்பகுதிகளில், இராஜேந்திரன் மேற்கொண்ட எண்ணற்ற போர்களைப் பற்றியும், கைப்பற்றிய நாடுகளைப் பற்றியும் தன் தந்தை போன்றே இராஜேந்திரனும் எண்ணற்ற கல்வெட்டுக்களை விட்டுச் சென்றுள்ளதால் அறிய முடிகிறது. இராஜேந்திரனுடைய இராணுவச் சாதனைகள், வெளிநாடுகளில் பெற்ற வெற்றிகள் ஆகியவை பற்றித் திருவாலங்காடு, கரந்தை(தஞ்சை)ச் செப்பேடுகள் ஆதாரத்துடன் தெரிவிக்கின்றன..

1943ல் சுபாஷ் சந்திர போஸ் ஈப்போ வந்த போது ஜான்சி ராணி படையினரின் அணிவகுப்பு சென்னை மாகாணத்தைச் சேர்ந்த லட்சுமி சுவாமிநாதனுடன்


லெமுரியன் ஆதி தமிழன்: Idea Prepaid Plan

லெமுரியன் ஆதி தமிழன்: Idea Prepaid Plan: NEW BUSINESS PLAN I...

சீனத்தில் தமிழ் கல்வெட்டு


Idea Prepaid Plan


NEW BUSINESS PLAN

Income Details
Binary Income:
-
First Pair
2:1 or 1:2 – Rs200
Thereafter
1:1 – Rs200
Daily Ceiling
5:5
5pairs
Rs1000
Daily Cutoff midnight
12.00 pm
Minimum Payout
Rs300
Weekly Closing
Friday
Weekly Payout
Wednesday
Deductions T.D.S -10% , S.C -10%

Idea Prepaid Plan Details:
Entry cost
Rs600
Tariff Details:
Free Calls
1000 Mins Local & STD calls ( Validity 180 days )
Free Data
1GB 3G Data ( Validity 30 days )
Call Charges:
Idea to idea
0.10 paisa
Other networks
0.30 paisa
STD calls
0.30 paisa (Validity 6 months )
Sms Charges:
Daily 100 Local & STD SMS Free
Daily 1st & 2nd sms charge Rs1 (Validity 3 months )

CONTACT : 9360504604 ; 9087964604

WEBSITE: www.gmbas.com/idea/

திங்கள், 15 ஜூன், 2015

துபாயில் தமிழிலிலும் டிரைவிங் லைசென்ஸ் தேர்வு



துபாயில் தமிழிலிலும் டிரைவிங் லைசென்ஸ் தேர்வு 

 துபாயில் ஓட்டுனர் உரிமத்திற்கான தேர்வில் தமிழ் உட்பட நான்கு இந்திய மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. துபாயில் டிரைவிங் லைசென்ஸ் பெற விரும்புவோர், முதலில் 30 நிமிடம் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். இந்த தேர்வு கணினி மூலமாக நடத்தப்படும். இந்த தேர்வை, துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து கழகம் (ஆர்டிஏ) நடத்தி வருகிறது. இதனை, ஆங்கிலம், உருது, அரபி ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே எழுத முடியும். இதனால், இந்தியாவை சேர்ந்த பலர், லைசென்ஸ் பெற வேண்டுமானால், பல முறை முயற்சி செய்ய வேண்டி இருந்தது. இந்த நிலையில், புதிதாக 7 மொழிகளை சேர்க்க ஆர்டிஏ முடிவு செய்துள்ளது. இதன்படி, வரும் செப்டம்பர் மாதம் முதல், தமிழ், ஹிந்தி, மலையாளம், பெங்காலி, சைனீஸ், ரஷியன், பெர்சியன் ஆகிய 7 மொழிகள் சேர்க்கப்படும். துபாய் அரசின் இந்த நடவடிக்கையால், மிக எளிதாக இந்தியர்கள் துபாய் டிரைவிங் லைசென்ஸ் பெற்று விடுவார்கள். துபாய் சாலை, போக்குவரத்து ஆணையத்தின், ஓட்டுனர் பயிற்சி மற்றும் தகுதி பிரிவின் இயக்குனர் ஆரிப் அல் - மலேக் இதுகுறித்து கூறியதாவது: வரும் செப்டம்பர் முதல் தமிழ், மலையாளம், இந்தி, வங்கம், சீனா, ரஷ்யா மற்றும் பெர்ஷிய மொழிகளிலும், தேர்வு நடத்தப்படும். இதனால் எட்டு விரிவுரை வகுப்புகள் மற்றும் எழுத்து தேர்வுகளுக்கு, மொத்தம் உள்ள, 11 மொழிகளில் ஒருவர் தனக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்து கொள்ளலாம்.திரையில் தெரியும் வாசகத்தின் ஒலி வடிவை ஒருவர் 'ஹெட்போன்' மூலம் கேட்கலாம். அவரால் அந்த வாசகத்தை படிக்க முடியாது போனாலும் ஒலி வடிவில் அதை புரிந்து கொண்டு சரியாக பதில் அளிக்க முடியும் என்றார்.

 

இறந்த உடலம் புலிகளின் தலைவர் அல்ல



இறந்த உடலம் புலிகளின் தலைவர் அல்ல
இறந்த உடலம் புலிகளின் தலைவர் அல்ல…! காலம் கடந்து வெடித்தது உண்மை.
புலிகளின் தலைவர் உயிரோட இருக்கார் ….இதை பல பேர் நம்புனாலும்,சிலர் நம்பல……இருக்கார் னு நிறைய ஆதாரங்களை சொன்னாலும்….இந்த விசயம் இதுவரைக்கும் கேள்விப்பட்டிருக்கமாட்டோம்….
முதல் படம் பிரபாகரனின் உடல்னு சிங்கள இராணுவம் காட்டிய உடல்….இதுல மேல் பற்களுக்கு இடையில இடைவெளி இருக்கும்….
இரண்டாவது படம் சில ஆண்டுகளுக்கு முன்னால் எடுக்கப்பட்ட தலைவரோட படம் ….இதுல பற்களுக்கு இடைல இடைவெளி இருக்காது ….
மூன்றாவது படத்துலயும் இடைவெளி இருக்காது….
தலைவர் சின்ன வயசுல வெடிவிபத்துல கால்ல காயம்பட்டு கால் கருத்துப்போனதால “கரிகாலன்” னு பேரு வந்துச்சு அந்த கருப்பான கால் எங்க…? இந்த படத்துல அதெல்லாம் ஒன்னும் இல்ல….
மிக நீண்ட நாள் ஆய்வில் கிடைத்த தகவல் இதை சிலர் வியப்பாக பார்க்கலாம் விடுதலைப் புலிகளின் தலைவரின் அருகிருந்த முக்கிய போராளி ஒருவரின் வாய் முறைப்பாடு காரணம் இறந்தால் என்பதற்கு அப்பால் உடற் கூற்று அங்க அடையாள ஆய்வுகள் சான்றாயின
விடுதலைப் புலிகளன் தலைவரின் உடற் கட்டமைப்பை ஒத்த ஒரு இராணுவச் சிப்பாய் இராணுவத்தில் இருந்ததை பல இராணுவ வீரர்கள் அறிவார்கள் அவர்களுக்கு இதில் இறந்துள்ளது யார் எனப் புரியும்
சிங்களவர்கள் இறந்துவிட்டார்கள் எனக் கூறுவதற்கு முன்பு பல தமிழர்கள் இறந்துவிட்டார் என்றனர் மிகவும் சிக்கலான வினா, ஒன்று மட்டும் உண்மை இதில் உள்ள உடலம் விடுதலைப் புலிகளின் தலைவருடையது அல்ல என பெயர் குறிப்பிட விரும்பாத விடுதலைப் புலிகளின் மூத்த போராளி உறுதிப் படுத்தினார் நீண்ட நாள் வினாவிற்கு ஒரு செய்தி.
இவ் விடயத்தை கருணா மற்றும் தயா மாஸ்ரர் நன்கறிவர் அத்துடன் உடலைப் பார்த்த பின் கருணா கூறிய கூற்றுக்களும் அப்படி அமைந்தது.
. . நன்றி lanka sri இணையம்