ஞாயிறு, 14 ஜூன், 2015

60-ம் கல்யாணம்

இன்று பரவலாக பிள்ளைகளால் பெற்றவர்களிற்க்கு 60-ம் கல்யாணம் நடாத்தி வைக்கும் பண்பாடு நிலவுகின்றது. இருந்தும் பலருக்கும் 60-ம் ‌பிற‌ந்த நா‌ள் ம‌ட்டு‌ம் அ‌வ்வளவு ‌சிற‌ப்பு ஏ‌ன், அ‌ந்த ஆ‌ண்டி‌ல் ம‌ட்டு‌ம் ‌‌மீ‌ண்டு‌ம் ‌திருமண‌ம் அதாவது 60-‌ம் க‌ல்யாண‌ம் நடாத்தப்படுகின்றது என்பதன் காரணம் தெரிவதில்லை.
அதாவது இத‌ற்கு ஆ‌ன்‌மீக அ‌ர்‌த்த‌ம் உ‌ள்ளது, அதற்கான சிறிய விளக்கம் இதோ உங்களுக்காக..
ஒருவருக்கு 60 வயது முடிந்து, 61-வது வயது தொடங்கும் ஜென்ம நட்சத்திர நாளன்று, அவர் பிறந்தபோது ஜாதகத்தில் நவகிரகங்கள் எந்த நிலையில் இருந்தனவோ அதே இடத்தில் மறுபடியும் அமைந்திருக்கும்.
அப்போது ஆயுளில் ஒரு பாகம் முடிந்து மறு பாகம் ஆரம்பி‌க்‌கிறது எ‌ன்று பொரு‌ள், அன்று முதல் அவர் புதுப்பிறவி எடுப்பதாக கருதலாம். ஒரு ஆயுளை அவ‌ர் முடி‌த்து‌வி‌ட்டா‌ர் எ‌ன்று‌ம் கருதலா‌ம். அதனால்தான், அப்போது திரும்பவும் திருமணம் செய்து வை‌ப்பா‌ர்க‌ள். இதை 60-ம் கல்யாணம் என்றும், சஷ்டியப்தபூர்த்தி என்றும் அழைக்கிறார்கள்.
பெ‌ற்றவ‌ர்க‌ள் த‌ங்களது ‌பி‌ள்ளைகளு‌க்கு ‌திருமண‌ம் நடாத்தி வை‌‌ப்பது போக, ‌பி‌ள்ளைக‌ள் பெ‌ற்றவ‌ர்களு‌க்கு நடாத்தி வைப்பதுதான்  60ஆ‌ம் க‌ல்யாண‌த்‌தி‌ன் ‌மற்றுமொரு சிற‌ப்பாகு‌ம்.

20 வயது வரை  நம்மை தயார் செய்து கொள்ளும் வாழ்க்கை

20 - 40
வரை உச்சத்தை தொடத் துடிக்கின்ற வாழ்க்கை

40-60
வரை பொறுப்பான குடும்பத் தலைவனின் வாழ்க்கை

60
க்கு மேல் எந்த ஒரு மனிதனும் தெளிவான வாழ்க்கையை மனதிற்கு பிடித்த வாழ்க்கையை அனுபவிக்கலாம்.

கால ஓட்டத்தில் தொலைத்து விட்ட நிம்மதியான வாழ்க்கையை நிதானித்து அனுபவித்து வாழ்க்கையைச் சொந்தங்கள் சுற்றங்கள் நட்புகள் இவர்கள் புடை சூழ வாழ்ந்து பார்க்கச் சொல்லும் காலம் இது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக