தமிழ் தான் உலகின் மூத்த
மொழி
"சமஸ்கிருதம் தான்
இந்தியாவின் ஆன்மா"- என்பது R.S.S. அமைப்பின் தீவிரமான
கொள்கை.எக்காரணத்துக்காகவும் இக் கொள்கையை R.S.S விட்டுக்
கொடுக்காது.தமிழ் தான் உலகின் மூத்த மொழி,சமஸ்கிருதம் உட்பட
பல்வேறு உலக மொழிகளுக்கும் தமிழ் மொழி தான் முன்னோடி என்பது தமிழ் உணர்வுள்ளவர்கள்
மட்டுமின்றி உலகின் பல நாடுகளைச் சேர்ந்த மொழியியல் ஆராய்சியாளர்களும்
ஏற்றுக்கொள்ளும் உண்மை.ஆனால் R.S.S அமைப்பு இந்த உண்மையை
ஏற்பதில்லை.இதை ஏற்றுக் கொண்டால் "சமஸ்கிருதம் தான் இந்தியாவின் ஆன்மா"
என்ற இவர்களின் அடிப்படைக் கொள்கையே தகர்ந்துவிடும்.
இது தகர்ந்துவிட்டால் இந்துத்துவ அரசியலின் அடித்தளமே ஆட்டம் கண்டுவிடும். இந்து
மதத்தின்(பிராமண மதம் என்பதே சரி) அடிப்படையாகச் சொல்லப்படும் 4 வேதங்களில் மிகப்
பழமையானது ரிக்வேதம். 383 அன்னியச்
சொற்களை ரிக் வேதம் பிற மொழிகளில் இருந்து கடன் வாங்கியிருப்பது ஆய்வுகளின மூலம்
நிரூபிக்கப்பட்டுள்ளது.முகம்,பழம்,களம்,
குண்டம்,கானா போன்ற சொற்கள் பரவலாக ரிக் வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிந்துச் சமவெளியில் பரவியிருந்த தமிழ் மொழியிலிருந்தே சமஸ்கிருதம் இச்சொற்களை கடன் வாங்கியுள்ளது. தமிழ் மொழியானது சமஸ்கிருதத்தை விட தொன்மையானது என்பது இதன்மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த உண்மையை நீண்ட காலமாக மறைத்து வரும் இந்துத்துவவாதிகள் இப்போது ஒரு சமரச உடன்பாட்டுக்கு வருகிறார்கள். "சமஸ்கிருதம் தான் இந்தியாவின் மூத்த மொழி என்பதை நீங்கள்(தமிழர்கள் )ஏற்றுக்கொள்ள வேண்டும், பதிலுக்கு தமிழ்மொழியை சமஸ்கிருதத்துக்கு அடுத்த நிலையில் உள்ள இந்தியாவின் மூத்தமொழிகளில் ஒன்று என நாங்கள்(R.S.S) ஏற்றுக்கொள்கிறோம்" என்பதே இவர்கள் நம் முன்பாக வைக்கும் சமரச ஒப்பந்தம்.

தனது சித்தாந்தவாதியான தருண் விஜய் அவர்களின் நாடாளுமன்ற
உரை மூலம் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தமிழர்கள் முன்பாக இந்த ஓப்பந்தத்தை வைத்துள்ளது.
தருண் விஜய் R.S.S-ன் பத்திரிக்கையான பஞ்சஜன்யாவின் (Panchajanya)
ஆசிரியராக
22 ஆண்டுகள்
இருந்தவர்.தீவிரமான சமஸ்கிருத வெறியர்..சமஸ்கிருதத்துக்கென மத்திய பல்கலைக்கழகம்
அமைக்க வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர்.ஆகவே தமிழ்மொழிக்கு ஆதரவாக
இவர் பேசுவதை ஆய்வுக்கு உட்படுத்திப் பார்க்கவேண்டும்.எளிதில்
உணர்ச்சிவசப்படுவதும்,யாரையும்
எளிதில் நம்பிவிடுவதும் தமிழர்களின் முக்கியமான பலவீனம்..இது நம்மை விட நம்
எதிரிகளுக்கு நன்றாகத் தெரியும்.இந்த பலவீனத்தைப் பயன்படுத்தியே தொடர்ந்து நம்மை
அடிமைத்தனத்திலேயே வைத்துள்ளார்கள்.இப்போது ஒரளவு விழிப்புணர்வு ஏற்பட்டு
வருகிறது.. வரலாற்று அனுபவத்தில் இருந்து நாம் நிறைய கற்றுக் கொண்டுள்ளோம்.முழு உண்மையும்
தமிழர்களுக்குப் புரிந்து விட்டால் இந்திய வரலாறு மட்டுமல்ல,மனிதகுல வரலாற்றையே
மாற்றி எழுத வேண்டிய நிலை ஏற்படும்.இது நடந்துவிடக் கூடாது என்பதே R.S.S
இயக்கத்தின்
நோக்கம்.அதற்காகவே தருண் விஜய் மூலம் நமக்கு ஒரு வலை விரிக்கிறது.உணர்வுள்ள
தமிழர்கள் என்ன செய்யப்போகிறோம்? R.S.S சொல்வது போல
சமஸ்கிருதம் தான் இந்தியாவின் ஆன்மா என்பதை ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தை ஏற்கப்
போகிறோமா? அல்லது
தமிழ் தான் மூத்தமொழி என்ற உண்மையை நிலை நாட்டுவதற்காக, இந்துத்துவ சக்திகளின்
சூழ்ச்சியை எதிர்த்து வீழ்த்தப் போகிறோமா? இது மொழி சம்பந்தப்பட்ட
பிரச்சனை மட்டுமல்ல,நமது
ஒட்டு மொத்த விடுதலையை தீர்மானிக்கக்கூடிய மிக முக்கிய பிரச்சனையாகும்........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக